
மாமாக் உணவகக் கடைகளில் விற்கப்படும் உணவுகள் தரம் குறைந்தவை என்று குற்றச்சாட்டு தொடர்பில் பிரெஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக சங்கம் போலீசில் புகார் செய்துள்ளது.
உணவு தரம் குறித்து இழிவாக பேசிய சர்ச்சைக்குரிய டாக்டருக்கு எதிராக பிரெஸ்மா நேற்று போலீஸ் புகார் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரெஸ்மா தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி தலைமையில் செந்தூல் போலீஸ் நிலையத்திற்கு வந்த உணவக உரிமையாளர்கள் 10க்கும் மேற்ப்பட்ட புகார்களை செய்தனர்.
இதே போன்று போலீஸ் புகார்கள் நாடு தழுவிய நிலையில் பிரெஸ்மா உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட டாக்டர் மீது போலீஸ் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதே வேளையில் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது பிரெஸ்மா கண்டிப்பாக வழக்கு தொடுக்கும் என்று டத்தோ ஜவஹர் அலி தெரிவித்தார்.

