பெட்டாலிங் கிளானா ஜெயா ஏரியில் மீன் பிடிக்கும் போட்டி! வெற்றியாளருக்கு 10,000 வெள்ளி ரொக்கப் பரிசு

பெட்டாலிங் ஜெயாவில் மீன் பிடிக்கும் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை கிளானா ஜெயா ஏரியில் நடைபெறுகிறது.

மொத்தம் 10,000 வெள்ளி ரொக்கப் பரிசை வழங்கும் பெட்டாலிங் ஜெயா 2023 மீன் பிடிக்கும் போட்டியில் பங்கேற்க மீன் பிடிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள இப்போட்டி காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும்.

இதில் பங்கேற்கும் 105 பேருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். முதல் நிலைக்கு RM6,000, இரண்டாம் நிலைக்கு RM2,000 மற்றும் மூன்றாம் நிலைக்கு RM1,000 வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மலேசியர்கள் 013-266 7011, 012-284 6811, 012-355 4946 எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles