
ஷா ஆலாம், ஆகஸ்ட் 7 – அடுத்து ஆண்டு சிலாங்கூர் மாநில அரசின் உயர்கல்வி நிதியுதவியைப் (HPIPT) பெறுபவர்களின் எண்ணிக்கையை 5,000ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் HPIPT உதவிக்கான விண்ணப்பங்கள் 5,000க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ள நிலையில், தற்போதுள்ள 3,000 பயனாளிகளின் எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்து வருவதாக அவர் கூறினார்.
எனவே, மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்ப பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்

