கண்ணில் ஏற்பட்ட ரத்தக்கசிவு அறுவை சிகிச்சைக்காக மோகன் முனியாண்டிக்கு மனித வள அமைச்சர் சிவகுமார் நிதியுதவி

சிப்பாங் டிங்கில் வட்டாரத்தை சேர்ந்த மோகன் முனியாண்டி என்பவரின் கண் ரத்தக்கசிவு அறுவை சிகிச்சைக்காக மனித வள அமைச்சர் வ.சிவகுமார் இன்று 3,300 வெள்ளியை வழங்கி உதவி புரிந்தார்.

ஏற்கனவே கண் அறுவை சிகிச்சை செய்தும் குணம் அடையாமல் கண்ணில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் இவர் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு முதல் அவதிப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் மனித வள அமைச்சர் சிவகுமாரை சந்தித்து உதவி கேட்டதாக மோகன் முனியாண்டி தெரிவித்தார்.

என் குறையை கேட்டறிந்த மனித வள அமைச்சர் சிவகுமார் விரைவாக என் விண்ணப்பத்தை பரிசீலித்து அறுவை சிகிச்சைக்காக 3,300 வெள்ளியை இன்று வழங்கியதாக மோகன் முனியாண்டி குறிப்பிட்டார்.

மனித வள அமைச்சர் சிவகுமார் கொடுத்த நிதியுதவி மூலம் இனி எந்த நேரத்திலும் கண் ரத்தக்கசிவுக்கு சிகிச்சை செய்து கொள்வேன்.

சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் எனக்கு நிதியுதவி கிடைத்தாலும் இன்னும் இரண்டு பிள்ளைகள் படிக்கிறார்கள்.

தக்க நேரத்தில் எனக்கு உதவி புரிந்த மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

மோகன் முனியாண்டிக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் மனித வள அமைச்சரின் அரசியல் செயலாளர் ரவீந்திரன், தனிச் செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles