தமிழ் ஊடகவியாளர்களின் வளர்ச்சிக்கு துணை நிற்பேன் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

தமிழ் ஊடகவியாளர்களின் வளர்ச்சிக்கு துணை நிற்பேன் என்று தொழில் முனைவர் கூட்டுறவு கழக மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் கு. தேவேந்திரன் தலைமையிலான ஊடகவியாளர்கள் குழு துணையமைச்சரை சந்தித்து பேசியது.
இக்கூட்டத்தில் தமிழ் ஊடகவியாளர்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களையும், வாய்ப்புகளையும் துணையமைச்சர் முன் வைத்தார்.
அதில் முக்கியமாக ஊடகவியாளர்கள் தங்களுக்கான உபரி வருமானத்தை
அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்புகளின் மூலம் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த வேளையில் ஊடகவியாளர்கள் தங்களுக்கு என்று கூட்டுறவு கழகம் ஒன்றை தொடங்க வேண்டும் என்ற சிறப்பான முடிவும் முன் வைக்கப்பட்டது. சாமர்த்தியமாக செயல்படுவதன் வழி கூட்டுறவு கழகத்தின் மூலம் சம்பாதிக்க முடியும் என்றார்.

மேலும் நாட்டில் உள்ள அனைத்து துறை ஊடகவியாளர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே இந்திய ஊடகவியாளர்கள் பலம் பொருந்தியவராக மிளிர முடியும் என்று மேலும் அவர் இந்தச் சந்திப்பில் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles