அந்நியத் தொழிலாளர் துன்புறுத்தப்படும் சம்பவங்களை மனிதவள அமைச்சு கடுமையாக கருதுகிறது அமைச்சர் வி. சிவகுமார் எச்சரிக்கை

கட்டாயப் பணிக்கு உட்படுத்தப்பட்டு பூட்டி வைக்கப்பட்ட இரு பணிப் பெண்களை ஆள்பல இலாகாவினர் மீட்டுள்ளனர் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.

இந்தோனேசிய, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரு பணிப் பெண்களை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இந்தோனேசிய தூதரகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்

இவர்கள் இருவரும் வேலை செய்த வீட்டில் வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை

மீட்கப்பட்ட இருவரும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள வேளையில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

பணிப் பெண்கள் உட்பட அந்நிய தொழிலாளர் துன்புறுத்தப்படும் சம்பவங்களை மனிதவள அமைச்சு கடுமையாக கருதுகிறது என்று அவர் எச்சரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles