கோலாலம்பூர்- பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற 18 லட்சத்து 60 ஆயிரம் மலேசியர்கள் அதாவது நாட்டின் மக்கள் தொகையில் 5.6 விழுக்காட்டினர் வேலை நிமித்தம் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளதாக மனிதவள அமைச்சர் வீ.சிவக்குமார் கூறினார்
புலம் பெயர்ந்தவர்களில் 11 லட்சத்து 30 ஆயிரம் பேர் அல்லது 60.75 விழுக்காட்டினர் சிங்கப்பூரில் பணியாற்றும் வேளையில் அவர்களில் 250,000க்கும் மேற்பட்டோர் உயர் நிபுணத்துவ திறன் கொண்டவர்கள் என்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது அவர் தெரிவித்தார்.
திறன் பெற்ற நிபுணர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை தடுப்பது மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிபுணர்களை மீண்டும் நாட்டிற்கு வரவழைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மிக அதிகமாக இருக்கும்.
சிங்கப்பூருக்குச் செல்வோரின் எண்ணிக்கையை நிர்வகிப்பதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
சிங்கப்பூர், துபாய், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நாட்டிலுள்ள திறன் பெற்ற நிபுணர்கள் புலம்பெயர்வதை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பாயான் பாரு தொகுதி உறுப்பினர் சிம் ஸி ஸின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் குறுகிய கால மற்றும் மத்திய கால நடவடிக்கையாக மைஹார்ட் எனும் ஓரிட தளத்தை டேலன்கோர்ப் வாயிலாக மனிதவள அமைச்சு உருவாக்கியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இதுவரை 10,000 நிபுணர்கள் நாடு திரும்ப விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதில் 6,000 நிபுணர்களின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.