நேப்பாளத்தில் மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்வோம்! வழக்கறிஞர் சிலமலர்

கோலாலம்பூர் ஆக 27-

நேப்பாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்திற்குப் பின்னர், தங்களது அன்புக்குரியவர்களிடமிருந்து தகவலுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களைப் பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது.

இந்த பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் எங்களது பிரார்த்தனைகள்.

தற்போது தொடர்புகொள்ள முடியாமல் இருக்கும் 55 மலேசியர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

சாலைகள், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்புகளில் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்புகளுக்கு மத்தியிலும், அவர்களை கண்டறிவதற்காக காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம் நேப்பாள அதிகாரிகள், தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில், மலேசியர்கள் உயிரிழந்ததாக எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை.

55 மலேசியர்களும் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டு, விரைவில் தங்களது குடும்பத்தினரிடம் திரும்பிச் சேர வேண்டும் என மனதார பிரார்த்திக்கிறோம்.

நல்ல செய்திக்காக ஆவலுடனும் கவலையுடனும் காத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினருடனும் எங்களது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.

சிவமலர் கணபதி
கெஅடிலான் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் மற்றும் துணை பொதுச் செயலாளர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles