

கோலாலம்பூர் ஆக 29-
தமிழ் திரைப்பட உலகில் மாபெரும் இயக்குநர், எழுத்தாளர், படைப்பாளியாக விளங்கும் கெளதம் மேனனின்
25 ஆண்டுக்கால பயணத்தை கொண்டாடும் வகையில் ONDRA RENDA 25 YEARS OF GVM எனும் மாபெரும் கலை விழா மலேசியாவில் நடைபெறவுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்வு வரும் அக்டோபர் 10ஆம் தேதி சனிக்கிழமை கோலாலம்பூரில் உள்ள ஜாலான் துன் ரசாக் The Arch Galeries-இல் நடைபெறவுள்ளது.
இந்த நட்சத்திர கலை விழாவில் புகழ்பெற்ற பாடகர் கார்த்திக், ஸ்ருதி ஹாசன், சத்ய பிரகாஷ், சைந்தவி, பால் டப்பா, பிளேஸ், ஹரி பிரியா, கிருஷ். இவர்களுடன் காதுக்கு இனிமை சேர்க்கும் நேரடி இசைக் குழுவும் இணைகிறது.
நேற்று பெர்ஜயா டைம்ஸ் ஸ்குவேயர் ஹோட்டலில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ராடான் குழு தலைவர் நடிகை ராதிகா, இந்நிகழ்ச்சி இயக்குநர் அன்பா உட்பட பலர் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கௌதம் வாசுதேவ் மேனன் (Gautham Vasudev Menon, ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.
தனது தமிழ்ப் படங்களின் மறு ஆக்கங்களாக தெலுங்கு மற்றும் இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளன.
முக்கியமாக காதல் திரைப்படங்களான மின்னலே (2001), வாரணம் ஆயிரம் (2008), விண்ணைத் தாண்டி வருவாயா (2010), மற்றும் த்ரில்லர்களான காக்க காக்க (2003), வேட்டையாடு விளையாடு (2006), மற்றும் என்னை அறிந்தால் (2015). இதில் வாரணம் ஆயிரம் திரைப்படமானது சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் இந்த நட்சத்திர இன்னிசை விழாவை முன்னிட்டு இப்போது டிக்கெட்டுகள் விற்பனையில் உள்ளன என்று மை இவென்ட்ஸ் இண்டர்நேஷனல் நிர்வாகி தயாளன் தெரிவித்தார்.

