தமிழ்ச்சமய விழா 2026 – பண்பாட்டு உடையில் திரண்டு வருக!

மலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திருவள்ளுவர் ஆண்டு 2057 மடங்கள் 31 ஆங்கிலம் 16/09/26 புதன்கிழமை காலை 8.30 முதல் பிற்பகல் 1.30 வரை பத்துமலை திருமுருகன் திருக்கோவில் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற இருக்கும் “தமிழ்ச்சமய விழாவிற்கு” மலேசிய தமிழர்கள் பண்பாட்டு உடையில் திரண்டு வர வேண்டுமென அதன் துணைத் தலைவர் திரு.அருள்மொழி ஆனந்த தமிழன் முனியாண்டி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

“தலைமுறைதோறும் தமிழ்ச்சமயம்” எனும் கருப்பொருளில் நடைபெறும் தமிழ்ச்சமய விழாவில் கட்டுரைப் போட்டிகளும் அறிவாயுத முகாம்களில் கலந்து கொண்ட இளைய தலை முறையினருக்கு ஊக்கத் தொகையும் பாராட்டுதலும் பண்பாட்டு நிகழ்வுகளுடன் சிறப்புரைகள் மற்றும் தமிழ்ச்சமய நடவடிக்கைகளும் அரங்கேறும் என்றார்.

தமிழருக்கே உரிய இறையலையும் அதன் மெய்யியலையும் மக்கள் மயமாக்கும் உன்னத நோக்கில் இலவயமாக நடைபெறும் இவ்விழாவில் தாய்த்தமிழ் உறவுகள் பங்கெடுத்து பயன்பெற வேண்டுமாய் மலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் சார்பில் பேரன்புடன் அழைப்பதாக அதன் துணைத் தலைவர் திரு. அருள்மொழி ஆனந்த தமிழன் முனியாண்டி அவர்கள் தெரிவித்தார்.

தொடர்புக்கு : 0143099379
010-6653718 / 011-40584619

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles