
தொழில் திறன் தொழிற்கல்வி பயிற்சி (TVET) திட்டங்கள்
அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் (GLC) மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று நடைபெற்றது.
துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி முன்னிலையில் மனித வள அமைச்சர் வ. சிவகுமாருடன் இந்த பத்து நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
மொத்தம் 12 அமைச்சுகள் இந்த தீவேட் தொழில் திறன் பயிற்சியில் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக PETRONAS, Gamuda,Sunway Services, DRB Hicom,Berjaya,Redbeat Academy (Air Asia), Daikin Malaysia, Bermaz Auto Berhad, Malaysia Technology Development, Malaysia Marine,Heavy Engineering Holding Berhad ஆகிய முன்னனி ஜிஎல்சி நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 55 விழுக்காட்டினர் இந்த தொழில் திறன் பயிற்சியில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
எஸ்பிஎம் தேர்வு எழுதி முடிக்கும் மாணவர்களை இலக்கு வைத்து தீவேட் தொழில் திறன் பயிற்சிகள் விரைவு படுத்தப்படும் என்றார்.

