

வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 50 விழுக்காடு ஆற்றல் நிறைந்த தொழில திறன் தொழிலாளர்களை உருவாக்க மனித வள அமைச்சு நூறு நிறுவனங்களுடன் இணைந்து ஒத்துழைக்கும் என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் 6.7 பில்லியன் வெள்ளியை தொழில் கல்விக்கு ஒதுக்கி வருகிறது.
இவ்வேளையில் தொழில் துறைகளுக்கு ஏற்றவாறு தொழிலாளர்களை உருவாக்க மனித வள அமைச்சு பாடுபடும்.
வரும் காலங்களில் போதுமான தொழில் திறன் வாய்ந்த தொழிலாளர்களை மலேசிய கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக
மனித வள அமைச்சு தீவேட் தொழில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது.
தீவேட் தொழில் திறன் கல்வி தரமானது. இது இரண்டாம் தர கல்வியாக கருத வேண்டாம்.
மேலை நாடுகளில் தொழில் திறன் கல்வியை அதிகளவில் மாணவர்கள் கற்று வருகிறார்கள்.
இதனால் அந்த நாடுகளில் போதுமான தொழில் திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
வருங்காலத்தில் மலேசியாவும் போதுமான தொழில் திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் தீவேட் தொழில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில் நூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் மனித வள அமைச்சு ஒத்துழைக்கும் என்று அவர் கூறினார்

