மக்கள் சக்தி கட்சி மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து
துணை பிரதமருடன் முக்கிய சந்திப்பு

தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியுடன் மக்கள் சக்தி கட்சி நேற்று முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தியது.

மக்கள் சக்தி கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன், துணை தலைவர் ஆர்.கே.ரமேஷ், உதவித் தலைவர் வி.சரவணக்குமார், பினாங்கு மாநில இளைஞர் அணி தலைவர் வீரபாகு தேவன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து சிறப்பித்தனர்.

தேசிய முன்னணி மற்றும் அம்னோவுக்கு தொடர்ந்து மக்கள் சக்தி கட்சி பிளவுபடாத ஆதரவை வழங்கும் என்று தெரிவித்த டத்தோஸ்ரீ தனேந்திரன், அம்னோவில் பல போராட்டங்கள் மத்தியில் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தொடர்ந்து வலுவுடன் இருக்கிறார் என்று அவர் கூறினார்.

மேலும் இவ்வாண்டில் மக்கள் சக்தி கட்சி தேசிய முன்னணியுடன் இணைந்து பணியாற்றும் திட்டங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles