மீண்டும் பள்ளிக்கு போகலாம் திட்டத்தின் கீழ் பிளட்சர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புத்தாடைகள் வாங்க கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் ஆலய நிர்வாகம் 9,000 வெள்ளி பட்டுச்சீட்டுகள் அன்பளிப்பு

வரும் மார்ச் மாதம் 20 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வேளையில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை வளாகத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் திருமுருகன் கோயில் நிர்வாகம் பிளட்சர் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 60 மாணவர்கள் புத்தாடைகள் வாங்க 9,000 வெள்ளி மதிப்புள்ள பட்டுச் சீட்டுகளை வழங்கியது.

நேற்று சிறப்பு பூசைக்கு பின்னர் பிளட்சர் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 60 மாணவர்கள் இந்த பட்டு சீட்டுகளை பெற்றுக் கொண்டனர்.

கோவில் தலைவர் டத்தோ சுரேஸ் தலைமையில் மாணவர்களுக்கு இந்த பட்டுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

கோலாலம்பூர் சோகோ பேரங்காடியில் பிளட்சர் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு தேவையான பள்ளி சீருடைகள், காலணிகள் வாங்கி கொள்ளலாம் என்று டத்தோ சுரேஸ் தெரிவித்தார்.

தங்கள் வட்டாரத்தில் உள்ள ஆலயங்கள் ஒரு தமிழ்ப் பள்ளியை தத்தெடுத்தால் அங்கு வசதி குறைந்த மாணவர்களின் பிரச்சனைகளை தீர்க்கலாம் என்று டத்தோ சுரேஸ் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles