
மலேசிய இந்து தர்ம மாமன்றம் பேரா மாநில மஞ்சோங் மாவட்ட ஆலோசகராக தினகரன் தேர்வு பெற்றார்!
அண்மையில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக, தொடக்கி வைத்து சிறபுரையாற்றிய தினகரன்,
இனிவரும் காலங்களில்,மாவட்டத்தில் நடக்கக்கூடிய சமய நிகழ்ச்சிகளுக்கு ,
தாம் கவனம் செலுத்த போவதாகவும், விரைவில் இது குறித்து சிறப்பு குழு ஒன்றை விரைவில் அமல்படுத்த போவதாகவும் தெரிவித்தார்.
மஞ்சோங்
மாவட்டத்தில் நடக்கக்கூடிய அனைத்து விதமான சமய விழா காலங்களை அந்த சிறப்பு குழு கண்காணிக்கும் என்பதனை அவர் கூறினார்.
இந்தியர்கள் கொண்டாடப்படும் அனைத்து விதமான விழா காலங்களில், சமயத்திற்கு முரணான செயல்களை செய்யக்கூடும் அனைத்து தரப்புகளையும் இந்த குழு கண்காணிக்கும் என்பதை கூறினார்.

