
இந்நாட்டில் இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் குறிப்பாக முடித்திருத்தும் நிலையங்கள், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நகைக்கடைகள்
எதிர்நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சனைக்கு நல்ல பதில் வரும் என்று மனித வள அமைச்சர் வ.சிவகுமார் இன்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
முடித்திருத்தும் நிலையங்கள், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நகைக்கடைகள் இப்போது கடுமையான அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சனையை எதிர் நோக்கி இருக்கிறது என்பதை நான் நன்றாக அறிந்து உள்ளேன்.
இந்த மூன்று சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்னை சந்தித்து உதவி செய்யும்படி முறையிட்டுள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கும் இந்த பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு காண உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் மற்றும் உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவினத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாவூடின் ஆயோப் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
இந்த மூன்று துறைகளுக்கு குறைந்தது 15,000 அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதையும் நான் கேட்டு அறிந்துள்ளேன்.
இந்த பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் உள்துறை அமைச்சு மற்றும் உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவின அமைச்சை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் சொன்னார்.
ஜொகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மனித வள அமைச்சு மூலம் மனித வள அமைச்சர் வ. சிவகுமார் இன்று பொருள் உதவிகளை வழங்கிய பின்னர் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

