
அண்மையில் ஜொகூர் மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மனித வள அமைச்சின் கீழ் இன்று பொருள் உதவிகள் வழங்கப்பட்டன.
Nadma எனப்படும் தேசிய பேரிடர் நிறுவனத்தின் துணை இயக்குநர் துவான் ஹூசேனிடம் இந்த உதவி பொருட்களை மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று நேரில் ஒப்படைத்தார்.
இன்று முதல் கட்டமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தேவைப்படும் பொருட்கள் வழங்கப்பட்டது.
அடுத்த வாரம் நேரடியாக ஜொகூர் மாநிலத்திற்கு வருகை புரிந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது என்பதை கேட்டறிந்து அதற்கு ஏற்ப உதவிகள் வழங்கப்படும் என்று மனித வள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
வெள்ளத்தின் சேதம் பெரிய அளவில் உள்ளது எனபதை நாங்கள் அறிவோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனித வள அமைச்சு முன் வந்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்
இன்று புத்ரா ஜெயா மனித வள அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் மனித வள துணை அமைச்சர் முஸ்தபா உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

