
அந்நியத் தொழிலாளர்களுக்கான சிறப்பு தளர்வு அனுமதி இன்று முதல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் கூறினார்..
நாட்டில் அந்நியத் தொழிலாளர்கள் இல்லமால் பல தொழில் துறைகள் பாதிக்கப்பட்டு வந்தன.
இப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஒரு சில தளர்வுகளுடன் அந்நிய தொழிலாளர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தோட்டம், தொழிற்சாலை, கட்டுமானம், விவசாயம், சேவைத்துறையில் உணவகம் ஆகிய தொழில் துறைகளுக்கு இந்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு தளர்வு அனுமதியின் மூலம் அந்நிய தொழிலாளர்களின் விண்ணப்பங்களுக்கு 3 நாட்களில் அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த மார்ச் 14ஆம் தேதி வரை 995,396 விண்ணப்பங்களுக்கு மனிதவள அமைச்சு ஒப்புதல் வழங்கி உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் குறிப்பிட்ட 5 தொழில் துறைகளில் நிலவி வந்த அந்நிய தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கும் என அமைச்சு நம்புகிறது என்றார் அவர்.
அதே வேளையில் ஒரு சில காரணங்களால் இந்த சிறப்பு தளர்வு சலுகை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் வரை இந்த ரத்து அமலில் இருக்கும் என்று அவர் கூறினார்

