மலேசியா – இந்தோனேசியா இடையிலான இருவழி உறவுகளை வளர்ப்பதற்கு எப்போதும் பக்கபலமாக இருப்போம்!
மனித வள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

இந்தோனேசியாவின் மனித வள அமைச்சர்
ibu Ida Fauziyah குறுகிய கால வருகையை மேற்கொண்டு மலேசிய வந்திருக்கிறார்.

மனித வள அமைச்சர் வ. சிவகுமார் கடந்த மாதம் இந்தோனேசியா தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பில் ஜகார்த்தா பயணம் மேற்கொண்டு இந்தோனேசியா மனித வள அமைச்சர் ibu Ida Fauziyah விடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப்போது இந்தோனேசியா மனித வள அமைச்சர் ibu Ida Fauziyah மலேசியாவுக்கு வருகை புரிந்து நேற்று மனிதவள அமைச்சர் வ .சிவகுமாரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தினார்.

இந்த சந்திப்பில் முக்கியமாக மூன்று
விஷயங்கள் நேரடியாக விவாதிக்கப்பட்டதாக மனித வள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

1) மலேசியாவில் உள்ள இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்களின் நலன்களை பாதுகாப்பது.

2) குறைக்கப்பட வேண்டிய இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்களை பணியமர்த்துவதற்கான செலவுத் தொகையை.

3) இந்தோனேசியா பணியாளர்கள் தொடர்பான பிற சிக்கல்கள் தீர்ப்பது

மிகவும் சுமூகமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில்
இந்தோனேசிய தூதர் மற்றும் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய – இந்தோனேசியா இடையிலான இரு வழி உறவுகள் மிகவும் வரலாற்றுப் பூர்வமான வை.

இரு நாடுகள் இடையிலான இந்த இரு வழி உறவுகளை வளர்ப்பதில் மலேசிய எப்போதும் பக்கப்பலமாக இருக்கும் என்று மனித வள அமைச்சர் சிவகுமார் உறுதியளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles