ScanKod, இனி வாகன திருட்டுச் சிண்டிகேட்டை அழிக்கும்!

ScanKod என்பது வாகனப் பாதுகாப்பு அமைப்பாகும், இது முதல் முறையாக QR குறியீட்டைப் பயன்படுத்தி வெளியீடு கண்டுள்ளது.

2020 புள்ளி விவரங்களின்படி, நம் நாட்டில் ஒரு மணி நேரம் 15 நிமிடங்களில், ஒரு வாகனம் திருடப்படுகிறது.

மலேசிய வாகன திருட்டு குறைப்பு கவுன்சில் (VTREC) ஒருங்கிணைப்பாளர் நடத்திய ஆய்வில், 2020 இல், ஒவ்வொரு நாளும் மொத்தம் 20 வாகனங்கள் திருடப்பட்டதாக புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.

மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டத்தில், இந்த திருட்டுச் சம்பவங்கள் குறைந்திருந்தாலும், எதிவரும் காலங்களில், வாகனத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

Universiti Tenaga Nasional (Uniten) மற்றும் தனியார் நிறுவனமான Globe Resources Sdn Bhd இணைந்து, வாகனத் திருட்டை முறியடிக்கும் நோக்கில் QR குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

ScanKod எனப்படும் இந்த அமைப்பு, திருடப்பட்ட வாகனங்களை மறுவடிவமைத்து மீண்டும் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்க உதவுவதில் தீவீரம் காட்டி வருகிறது.

Globe Resources Sdn Bhd தலைமை நிர்வாகி எஸ்.மாறன் கூறுகையில் ScanKod மூலம் நாட்டில் கார் திருட்டுகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மாத இறுதிக்குள், பிற அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து இந்த அமைப்பு காவல்துறையினரால் பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles