பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் நடத்திய ஆணவங்கள் இல்லாத சந்திப்பில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டனர்

இந்நாட்டில் இந்திய சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் ஆணவங்கள் குறிப்பாக குடியுரிமை, பிறப்பு பத்திரம் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண பத்து நாடாளுமன்ற உறுப்பினர் வி. பிரபாகரன் இன்று முக்கிய கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.

தேசிய பதிவு இலாகா அதிகாரிகள் உட்பட குடியுரிமை தொடர்பில் விளக்கம் அளிக்க அனைத்து தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர்.

தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு குடியுரிமை இல்லாததால் பிரபாகரன் மூலம் விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் படையெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles