

பினாங்கு மாநிலத்தில் பாயான் லெப்பாஸ் சுங்கை ஆராவில் பத்ரா காளியம்மன் கோவில் நிர்வாகம் எதிர் நோக்கி இருக்கும் ரத நிலப் பிரச்சனையை கேட்டறிய பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் டாக்டர் பி இராமசாமி நேரில் வருகை புரிந்தார்.
இந்த கோவில் இப்போது ரதத்தை நிறுத்தி வைக்கும் நிலப் பிரச்சனையை எதிர் நோக்கி இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த நிலப் பிரச்சனைக்கு எந்த வகையில் தீர்வு காண்பது தொடர்பில் வழி வகைகள் ஆராயப்படும் என்று டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.
பினாங்கு மாநிலத்தில் உள்ள இந்து கோவில்கள் உடைபடாமல் இருப்பதை பல ஆண்டுகளாக பேராசிரியர் டாக்டர் ராமசாமி காத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கோவில்கள் எதிர் நோக்கிய நிலப் பிரச்சனைகளுக்கும் அவர் நல்ல முறையில் தீர்வு கண்டிருக்கிறார்.

