

வரும் மார்ச் மாதம் 20 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் வேளையில் பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து இனங்களையும் சேர்ந்த 400 ஆரம்பப் பள்ளி மாணவர்கள் புத்தாடைகள் மற்றும் காலணிகள் வாங்குவதற்கு மனித வள அமைச்சர் வ. சிவகுமார் இன்று பட்டுச் சீட்டுகளை வழங்கி உதவி புரிந்தார்.
ஒரு மாணவர் இரண்டு பள்ளி சீருடைகள் மற்றும் காலணிகள் வாங்குவதற்கு தலா 150 பட்டுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
மொத்தம் 400 மாணவர்களுக்கு மனித வள அமைச்சர் சிவகுமார் பட்டுச் சீட்டுகளை வழங்கி பேருதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசதி குறைந்த பெற்றோரின் சுமையை குறைக்கும் வகையில் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான சிவகுமார் இன்று காலையில் தமது சேவை மையத்தில் மாணவர்களுக்கு பட்டு சீட்டுகளை வழங்கி அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உற்சாகப் படுத்தினார்.
இரு வாரங்களுக்கு முன்னர் பத்து காஜா நாடாளுமன்ற தொகுதி சேவை மையத்தின் மூலம் 600 மாணவர்களுக்கு புத்தகப் பைகளை அவர் வழங்கினார்.
இப்போது 400 வசதி குறைந்த மாணவர்கள் புத்தாடைகள் வாங்க உதவியுள்ளார்.
இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் மனித வள அமைச்சரின் தனிச் செயலாளர் மகேஸ்வரி உட்பட பத்து காஜா நாடாளுமன்ற தொகுதி சேவை மையத்தின் பொறுப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

