
பேராக் மாநிலத்தில் பத்து காஜா பூசிங் சிப்பூத்தேவில் அண்மையில் நிகழ்ந்த தீ விபத்தில் இரண்டு வீடுகள் பாதிக்கப்பட்டன.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்ட மனித வள அமைச்சர் வ. சிவகுமார் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.
வீடுகளை உடனடியாக பழுது பார்க்க இரு குடும்பத்தினருக்கு மனித வள அமைச்சர் சிவகுமார் 10,000 வெள்ளியை வழங்கி உதவி புரிந்தார்.
மனித வள அமைச்சரின் தனிச் செயலாளர் மகேஸ்வரி மற்றும் பத்து காஜா கவுன்சிலர் விஜயகுமார் ஆகியோரும் அப்போது உடனிருந்தனர்.

