இந்திய குத்தகையாளர்களுக்கு கட்டுமான பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பயிற்சி!

மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுமார் 80 குத்தகையாளர் சங்கப் பணியாளர்களுக்கு இலசவப் பயிற்சியை நேற்று சங்க அலுவலகத்தில் நடத்தினர்.

குத்தகை தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களது தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும்.

அதன் முக்கியத்துவம் தெரிந்திருக்க வேண்டும் என்பதன் நோக்கத்திற்காக, இந்தப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டதாக மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜனார்த்தன் தெரிவித்தார்.

குறிப்பாக குத்தகை தொழிலில் பாதுகாப்பு முக்கியமானது. அதில் சிறு பிழை செய்தாலும் பல விதமான சட்டச் சிக்கலை குத்தகையாளர்கள் எதிர்நோக்க வேண்டும்.

அதில் எப்படி கவனமாக இருப்பது என்பதிலும், இந்த துறையில் சில ரசாயன பொருட்களால் பணியாளர்களின் சுகாதாரம் பாதிப்படையும் அதற்கு முறையான மருத்துவ பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம் என்றார் 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles