
ஜொகூர் பாரு, ஆக 10-
அண்மையில் நடந்து முடிந்த ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றி அடைந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வெற்றிக்கு இந்திய சமுதாயம் முழு பங்களிப்பை ஆற்றியுள்ளது என்பதை கருத்தில் கொண்டு, மாநில முதல்வர் டத்தோ ஓன் ஆபீஸ் இந்தக் கோரிக்கையைப் பரிசீலனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலரான சந்திர சேகரன் கேட்டுக் கொண்டார்.
மேலும், ஜொகூர் மாநில மஇகா இந்தத் தேர்தலில் நூறு விழுக்காடு வெற்றியை அடைந்தது என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்பதை கவனத்தில் கொண்டு, மாநில மஇகா தலைவர் திரு. ரவின்குமார் கிருஷ்ணசாமி இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு,
பெர்லிங் சட்டமன்ற உறுப்பினர் திரு. பன்னீர்செல்வம் பாலகிருஷ்ணன் இந்த விவகாரத்தில் உறுதியாக நின்று, சட்டமன்றத்தில் கோரிக்கை முன்வைக்க வேண்டும் என திரு. சந்திர சேகரன் கேட்டுக் கொண்டார்.
இந்த வட்டாரத்தில் அதிகமான இந்திய வணிகர்கள் வியாபாரம் செய்வதால், அவர்களுக்கு இந்தப் பிரகடனம் மேலும் உற்சாகமாக அமையும் என்பதை அவ்வட்டார மக்களின் சார்பில் முன்வைப்பதாக முன்னாள் சட்டமன்ற வேட்பாளருமான திரு. சந்திர சேகரன் தெரிவித்தார்.

