2027 சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு கூடுதலான நிதியை ஒதுக்குங்கள்! டாக்டர் சுரேந்திரன் வேண்டுகோள்

ஷா ஆலம், அக் 12-
மிக விரைவில் தாக்கல் சேய்யப்படவுள்ள சிலாங்கூர் மாநில 2027 பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு கூடுதலான நிதியை ஒதுக்குங்கள் என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் 97 தமிழ்ப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் 50 லட்சம் வெள்ளி மானியம் அதிகரிக்கப்பட வேண்டும்.

மேலும் சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் பத்து லட்சம் வெள்ளி மதிப்பிலான இலவச பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்.

கோயில்களுக்கு மானியம், உயர் கல்வி மாணவர்களுக்கு நிதியுதவி, தீபாவளி பற்று சீட்டுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதை கவனத்தில் கொண்டு இந்திய சமுதாயத்திற்கு போதுமான நிதியை ஒதுக்குவார் என்று பெரிதும் நம்புகிறேன்.

இந்திய சமுதாயம் ஒரு போதும் விடு படக்கூடாது. அந்த வகையில் தற்போது வழங்கி வரும் மானியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன் என்றார் அவர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles