கோலலங்காட் டில் வசதி குறைந்த குடும்ப ங்களைச் சேர்ந்த 62 பேருக்கு 419,000 ரிங்கிட் மதிப்புள்ள ஐ_சீட் உதவிப் பொருட்கள்

பந்திங் செப்.12-
கோலலங்காட் மாவட்ட ரீதியில் வசித்து வரும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர், சிலாங்கூர் மாநில அரசின் ஐ..சீட் உதவிப் பொருட்களை சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் மூலம் பொருட்களையும் அதே வேளையில் நினைவுப் பரிசுகளையும் பெற்று கொண்டனர் .

சிலாங்கூர் மாநில அளவில் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் மாநில அரசின் ஐ..சீட் உதவிப் பொருள் வழங்கும் திட்டத்தில் அரசு, 419,000 ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்து பொருட்கள் அனைத்தும் வாங்கப்பட்டதாக இந்த நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினார் .

இந்தத் திட்டத்தில், வசதி குறைந்த குடும்ப உறுப்பினர்கள் ஐ..சீட் வழி வழங்கப்படும் பொருட்களை பெற்று தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் அதே வேளையில் பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளவும் மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னெடுத்து அவரது ஆலோசனைப்படி செயல்படுத்தி வரும் இந்தத் திட்டம் தொடர்ந்து வெற்றியுடன் பயணிக்க பலரும் இதன் நடவடிக்கைகள் வளர்ச்சி நோக்கம் செயல்பாடுகளுக்கு பேருதவியாக தொடர்ந்து இருந்து வருகின்றனர் என்று பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பாராய்டு தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles