தஞ்சோங் காராங் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்திர திருவிழாவில் மஹிமா தலைவர் டத்தோ சிவகுமார் பங்கேற்பு

தஞ்சோங் காராங், செப். 13 –

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் மன்றம் (MAHIMA) தலைவர் டத்தோ சிவகுமார் நடராஜா, தஞ்சோங் காராங்கில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்டார்.

ஆலய நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து கொண்ட டத்தோ சிவகுமார், பக்தர்களுடன் இணைந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

ஆன்மிக உணர்வும், சமூக நல்லிணக்கமும் நிறைந்த சூழலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆலய பக்தர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர். பக்தி மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இதனிடையே, நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்த ஆலய நிர்வாகத்திற்கு MAHIMA சார்பில் டத்தோ சிவகுமார் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் தொடர்ந்து ஆன்மிக வளர்ச்சியுடன் சிறப்பாகச் செயல்பட்டு, இந்து சமூகத்திற்குத் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles