


பீடோர்,செப்17: மக்களின் உணர்வறிந்தும் அவர்களின் தேவைகளை உண்ரந்தும் சேவையும் உதவிகளும் வழங்கிடும் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசனுக்கு இவ்வட்டாரத்தைச் சார்ந்த சிறுத்தொழில் வியபாரிகளான திருமதி.சு.புவனேஸ்வரி மற்றும் திருமதி,சி.ஷியமலாதேவி ஆகியோர் தங்களின் நன்றியினை நெகிழ்ச்சியோடு பதிவு செய்து கொண்டனர்.
பீடோர் மார்கெட் அருகில் சிறிய உணவகம் நடத்தி வரும் ஷியமலாதேவிக்கு அந்த உணவு அங்காடிக்குத் தேவையான மேசைகள்,உணவுகளை வைக்கும் சிறுரக அலமாரி ஆகியவற்றை மாநில அரசின் பிஸ்நீதா (BIZNITA) வாயிலாக வழங்கப்பட்ட நிலையில் அதனை ஏற்பாடு செய்து கொடுத்த மாநில சுகாதாரம்,மனிதவளம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்காக ஆட்சிக்குழு உறுப்பிப்பினருமான டத்தோ சிவநேசனுக்கு நன்றி தெரிவித்த ஷியமலாதேவி எங்களைப் போன்ற பி40 மற்றும் சிறுத்தொழில் செய்பவர்களுக்கு டத்தோ சிவநேசனின் சேவை அளப்பரியது என்றார்.
அதேவேளையில், இவ்வட்டாரத்தின் அடிப்படைத் தேவைகளையும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் கூட அவர் நிறைவாகவே செய்தும் வருகிறார்.பீடோர் மார்கெட்டைப் புதுப்பித்து அதன் வசதிகளை மேம்படுத்தியதோடு அதனை சுற்றியுள்ள சாக்கடை,கால்வாய்களும் சீரமைக்கப்பட்டு மக்களின் வசதிக்கு ஒப்ப அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
அதுபோல்,சுங்கையில் கடந்த 5 ஆண்களாக கிழங்கு வகைகள்,காய்கறிகளை வியபாரம் செய்து வரும் புவனேஸ்வரி கூறுகையில் தாம் கேட்காமலேயே இம்மாதிரி ஒரு திட்டம் இருப்பதாகவும் வியபாரத்து தேவையான உதவி பொருட்களுக்கு விண்ணப்பம் செய்யுமாறும் டத்தோ சிவநேசனின் சேவை மையயம் தன்னை அணுகி இவ்வுதவிகள் கிடைத்திட வழி செய்ததாகவும் கூறினார்.
டத்தோ சிவநேசனின் வாயிலாக கிடைக்கப் பெற்ற இவ்வுதவி பொருட்களால் தனது வியபாரத்தை மேம்படுத்தவும் இன்னும் விரிவாக்கம் செய்யவும் பெரும் உதவியாக அமைந்திருப்பதாகவும் கேட்காமலேயே கிடைக்கப் பெற்ற இவ்வுதவி பெரும் நெகிழ்ச்சியானது என்றார்.சுங்கை வாழ் மக்களின் ஒவ்வொரு தேவைகளையும் அத்துணைச் சிறப்பாக டத்தோ சிவநேசன் மேற்கொண்டு வரும் நிலையில் மக்களின் சேவகனாகவே அவர் இத்தொகுதில் உலா வருகிறார் என்றும் கூறினார்.
அதுமட்டுமின்றி,மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து உடனடி தீர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி உதவி வேண்டுவோர் அவரது சேவை மையத்தை அணுகினாலே நிறைவான சேவையும் உதவிகளும் தொடர்ந்து கிடைத்தும் வருவதாக அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில்,அவ்விருவரும் உதவிப்பொருட்களை வழங்கிய பின்னர் இதுகுறித்து பேசிய டத்தோ சிவநேசன் பேரா மாநில அரசாங்கத்தில் மக்களுக்காக வரையறுக்கப்பட்டிருக்கும் மக்கள் நலத்திட்டங்களை மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்றார். மாநில அரசின் இத்திட்டங்கள் அனைத்து அரசாங்கத்தின் அகப்பக்கங்களில் பதிவேற்றமும் செய்யப்பட்டிருக்கும்.இருந்த போதிலும் இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளவும் விபரங்களை அறியவும் தனது சேவை மையத்தை அணுகுமாறும் அவர் மேலும் கேட்டு கொண்டார்.
அரசாங்கத்தின் பிஸ்நிதா திட்டம் வாயிலாக இதற்கு முன்னர் மேலும் இரு பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அவற்றில் ஒருவருக்கு உணவகத்துக்கு தேவையான பொருட்கள் என்றும் மேலும் ஒருவருக்கு தையல் இயந்திரம் உட்பட அதுசார்ந்த பொருட்களும் வழங்கப்பட்டது என்றும் டத்தோ சிவநேசன் நினைவுக்கூர்ந்தார்.
மேலும்,உதவிகளைப் பெறுவோர் அப்பொருட்களைத் தங்களின் வியபாரத்திற்காக பயன்படுத்தி குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும். அவ்வாறு தொடரப்பட்டால் தான் மேலும் அதிகமான பெண்களுக்கு இத்திட்டம் வாயிலாக உதவிகள் கிடைக்கும் என்றும் நினைவுறுத்தினார்.
சுங்கை-பீடோர் வட்டாரங்களைப் பொருத்தமட்டில் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் அடிப்படைத் தேவைகளுக்கு தாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவ்வகையில் இங்குள்ள பொது மண்டபங்கள்,மார்கெட்,அங்காடி உணவு மையங்கள்,வியபாரத்தலங்கள் உட்பட பல்வேறு தேவைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைவாக உகர்ந்த நிலையில் சீரமைக்கப்பட்டும் புதுப்பிக்கப்பட்டும் வருவதாகவும் கூறினார்.
மாநில அளவில் தனது சேவையை ஆட்சிக்குழு உறுப்பினராக நனிச் சிறந்த நிலையில் வழங்கி வரும் டத்தோ சிவநேசன் தனது சுங்கை சட்டமன்றத் தொகுதியில் தனித்துவமான சேவையை வழங்கி வருவதோடு மக்களின் குரலாகவும் உணர்வாகவும் உயிர்த்தெழுந்து மக்கள் போற்றும் சேவையாளராகவும் பிரதிநிதியாகவும் திகழ்வதாக புவனேஸ்வரியும் ஷியமலாதேவியும் தங்களின் நன்றி பகிர்தலில் குறிப்பிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

