டாக்டர் ஆனந்த கிருஷ்ணனுக்கு சமர்ப்பணமாக ‘Damoxin’ ஆன்டிபயாடிக் ஆராய்ச்சி
– பரமேஸ்வரன்

கோலாலம்பூர்:
மறைந்த பேராசிரியர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணனுக்கு சமர்ப்பணமாக ‘Damoxin’ ஆன்டிபயாடிக் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பியோன் பயோமெடிக் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் எம். பரமேஸ்வரன் தெரிவித்தார்.

பேராசிரியர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் மருத்துவத் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பல மருந்துகள் தொடர்பான கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டவர் என்று அவர் கூறினார்.

குறிப்பாக ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிகளை அவர் மேற்கொண்டதாகவும் பரமேஸ்வரன் தெரிவித்தார்.

இந்நிலையில், அவர் மறைவதற்கு முன்பு ‘Damoxin’ என்ற ஆன்டிபயாடிக் தொடர்பான பணிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அது முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை என்றும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, பியோன் பயோமெடிக் நிறுவனம் அனைத்துலக மானவ் ரச்னா ஆய்வகத்துடன் இணைந்து ‘Damoxin’ ஆன்டிபயாடிக் தொடர்பான மேலதிக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக பரமேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தால், ‘Damoxin’ தொடர்பான ஆவணங்கள் சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டு, உரிய அங்கீகாரத்திற்காக விண்ணப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles