
காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்
ஷா ஆலம் அக் 4-
தேசிய மற்றும் மாநில அரசு பதவிகளில் ம இகா சார்பில் அதன் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ம இகா தொடர்பு குழு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று ஷா ஆலம் ஐடிசிசி மாநாட்டு மண்டபத்தில் சிலாங்கூர் மாநில ம இகாவின் 80 ஆம் ஆண்டு மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் மொத்தம் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒரு தீர்மானமாக அரசு பதவிகளில் குறிப்பாக கவுன்சிலர், கிராமத் தலைவர், நிறுவன இயக்குநர் போன்ற பதவிகளில் ம இகா தலைவர்கள் நியமிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மெட்ரிகுலேஷன், உயர் கல்வி கூடங்களில் இந்திய மாணவர்களுக்கு நியாயமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிலாங்கூர் மாநில ம இகா தொடர்பு குழு தலைவர் டத்தோ எம் சங்கர் தலைமையுரை ரோடு மாநாடு தொடங்கியது.
சிலாங்கூர் மாநில ம இகா தொடர்பு குழு செயலாளர் சசிதரன் அனைவரையும் வரவேற்று பேசினார்

