
காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்
ஷா ஆலம் அக் 4-
வரும் பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றுவோம் என்று சிலாங்கூர் மாநில ம இகா தொடர்பு குழு தலைவர் டத்தோ எம் சங்கர் ராஜ் ஐயங்கர் இன்று சூளுரைத்தார்.
தேர்தலை சந்திக்க தயாராக இருக்கங்கள். வெற்றி பெற்று சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றுவோம் என்றார்.
ஜொகூர் மாநில தேர்தல் வேறு, நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் வேறு.
மலாக்கா மாநில தேர்தல் வேறு.அதே சமயம் சிலாங்கூர் மாநில தேர்தல் வேறு விதமாக இருக்கும்.
ஆகவே நாம் கண்டிப்பாக வெற்றி பெற கடுமையாக உழைப்போம்.
18 ஆண்டுகளாக நமக்கு எதுவுமே கிடைக்கவில்லை.
போராடியதால் மருத்துவமனை வருகையாளர் பதவி கிடைத்தது.
மேலும் தற்போது சிலாங்கூர் மாநிலத்தில் நான்கு பேர் மட்டுமே கிராமத் தலைவர்களாக இருக்கிறார்கள்.
இன்று ஷா ஆலம் ஐசிசிசி மண்டபத்தில் சிலாங்கூர் மாநில ம இகா 80 ஆம் ஆண்டு கூட்டத்தில் உரையாற்றும் போது இவர் இதனை குறிப்பிட்டார்.
ஷா ஆலம் ஸ்ரீமூடாவில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடருக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அந்த வகையில் வெள்ள பேரிடரை முறையாக கையாள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கும் 50 லட்சம் வெள்ளி மானியம் உயர்த்தப்பட வேண்டும்.
இந்த 50 லட்சம் வெள்ளி மானியம் போதுமான அளவு இல்லை என்று அவர் சொன்னார்.
இதனிடையே கோவில் விவகாரமும் சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

