
கோலாலம்பூர், அக் 4-
நேபாளத்தின் ரசுவாகதி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் சிக்கி கொண்ட 54 மலேசியர்களின் நிலை இன்னும் உறுதிப்படுத்தப்படாததால், அவர்களைத் தேடும் முயற்சிகள் தொடர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பிரதிநிதிக்கும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முடிவடைந்தாலும், காணாமல் போனவர்களின் நிலையை உறுதிப்படுத்தும் முயற்சிகள் தொடர வேண்டும் என அதன் பேச்சாளர் டாக்டர் மணிவண்ணன் ரத்தினம் கேட்டுக் கொண்டார்.
அடையாளம் காணும் பணிக்காக மேலும் 20 டிஎன்ஏ மாதிரிகளைச் சீன அதிகாரிகளிடம் வழங்கவும், மீட்கப்பட்ட தனிப்பட்ட பொருட்களின் பட்டியலைக் குடும்பங்களுடன் பகிரவும் அவர் கோரினார்.
குடும்பங்களின் கடன் தவணைகளைத் தற்காலிகமாக ஒத்திவைப்பது உள்ளிட்ட உதவிகளுக்கு பேங்க் நெகாரா ஒருங்கிணைந்த ஏற்பாட்டை உருவாக்க வேண்டும் என்றும், சட்டரீதியாக இறந்ததாகக் கருதும் நடைமுறை மற்றும் சொத்துகளை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அமைப்பு கேட்டுக் கொண்டது.
பிரதமர், பேங்க் நெகாரா மற்றும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துடன் சந்திப்புகளை விரைவுபடுத்துமாறு வலியுறுத்திய இந்த அமைப்பு
54 பேரும் குடும்பங்களிடம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது.
அந்த நம்பிக்கையுடன் விரைவான நடவடிக்கையும் தேவை என்று அவர் கேட்டுக் கொண்டார்.

