சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராக இருங்கள்!டத்தோஸ்ரீ மெகாட் வேண்டுகோள்

காளிதாஸ் சுப்ரமணியம்

மா.பவளச்செல்வன்

ஷா ஆலம் அக் 4-
சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ மெகாட் சூல்கர்ணயன் கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றமோ எந்த தேர்தலாக இருந்தாலும் அதை தேசிய முன்னணி இன்னும் பலமாக இருக்க வேண்டும்.

எல்லா மாநிலங்களில் மக்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு திரும்பி உள்ளது.

அந்த நீல அலை சிலாங்கூர் மாநிலத்திலும் எதிரொலிக்கும்.

ஆக இந்த பொன்னான வாய்ப்பை தேசிய முன்னணி முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மஇகா உட்பட அனைத்து உறுப்பு, தோழமை கட்சிகளும் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும்.

தொகுதிகள் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். நிச்சியம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படும்.

குறிப்பாக வெற்றி பெறக்கூடிய தொகுதிகளும் ஒதுக்கப்படும்.

இதன் அடிப்படையில் சிலாங்கூர் மாநில தேர்தல் கேந்திர அறிமுக விழா விரைவில் நடைபெறும்.

கிட்டத்தட்ட 20,000 பேர் இவ்விழாவில் திரள்வார்கள்.

இது தேர்தலை எதிர்கொள்ள தேசிய முன்னணி தயார் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் உள்ளது என்று அவர் சொன்னார்.

இன்று ஷா ஆலம் ஐசிசிசி மண்டபத்தில் சிலாங்கூர் மாநில மஇகா மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles