மலேசிய-இந்திய கலைஞர்கள் மத்தியில் கலை பண்பாடு மற்றும் நட்புறவை மேம்படுத்த இரு வழி புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை, அக் 6-
மலேசிய மற்றும் இந்திய நாட்டு கலைஞர்கள் மத்தியில் நிலவும் கலை, பண்பாடு மற்றும் நட்புறவு நிலைகளை அடுத்த உயர் நிலைக்கு மேம்படுத்தும் நோக்கில்,இரு வழி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மலேசிய நாட்டின் பிரசித்திபெற்ற இயக்கமான மிக்காஸ்-டெலி ஸ்டாருக்கும்,;(MICAS-TELESTAR) தமிழ் நாட்டின் தமிழ்க் கலை இசை சங்கமம் இயக்கத்திற்குமிடையில் கையொப்பமானது.

மலேசிய நாட்டின் இயக்கத் தலைவர் எஸ்.பி.மணிவாசகமும் தமிழ் நாட்டின் முன்னாள் ஐ.ஏ.ஸ் அதிகாரியும் மதுரையின் முன்னாள் கலெக்டரும், தமிழ் கலை இசை சங்கமத்தின் நிறுவனரும் ,மிகச் சிறந்த கலைஞருமான உயர்திரு காமராஜும் இந்த இருவழி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

இந்த வரலாற்றுப்பூர்வமான நிகழ்ச்சியினை மலேசிய கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் , உலக தமிழ் பண்பாட்டு இயக்கத் தலைவருமான தொழிலதிபர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கி சிறப்புச் சேர்த்தார்.

இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இரு நாட்டு கலைஞர்களும் தகுந்த வழிமுறையுடன் முறையாக அந்தந்த நாட்டிக்கு பயணமேற்கொண்டு கலை மேம்பாட்டிற்கு பங்காற்றுவர். கலை நிகழ்ச்சிகள், மேடை நாடகங்கள், நாட்டுபுற கலைப்படைப்புகள்,நடனங்கள் என பல்வேறு கலை சார்ந்த அரங்கேற்றங்கள் நடைபெற இவ்விரு இயக்கங்களும் பாடுபட்டு, அத்துறை கலைஞர்களை கௌரவித்து உகந்த மரியாதையையும் வழங்கும் என உறுதி கொண்டுள்ளனர்

முதல் கட்டமாக சென்னையில் பொன்னந்தி மாலைப் பொழுது”எனும் பிரமாண்டமான கலை மாலை அரங்கேற்றம் கண்டது. மலேசிய கலைஞர்களும் இந்திய கலைஞர்களும் இணைந்து 4 மணி நேர இசை சங்கமித்தினர். இத்தகைய கலை பரிமாற்றம் 2027-ஆம் ஆண்டு மலேசிய நாட்டில் நடைபெறும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் இக்கலை விழா இரு நாட்டிலும் நடத்த உறுதி கொண்டுள்ளனர்.
இந்திய ஏற்பாட்டுக்குழுத் தலைவர் உயர்திரு காமராஜ் பேசுகையில்,” இது உயர் நட்பால் ஏற்பட்ட உறவு, கலை ஈடுபாட்டாலும் புரிந்துணர்வாலும் அமையப்பட்ட பந்தம், இதனை தேர்த்தியாக வளர்ப்பது நம் தலையாய கடமையாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி கூறிய மிக்காஸ்-டெலி ஸ்டார் தலைவர் எஸ்.பி.மணிவாசகம், இந்தியாவுடன் குறிப்பாக தமிழ் நாட்டுடன் நீண்ட கலை கலாச்சார மற்றும் பண்பாட்டு உறவினை மலேசியத் தமிழர்கள் கொண்டுள்ஏனர் என்பதோடு, அதனை அடுத்த உயரத்திற்கு கொண்டு செல்ல முனைந்திருப்பதே இந்த புதிய வியூகத்திட டம் என கருத்துருத்தார். தலைவர் காமராஜ் மேல் கொண்ட நம்பிக்கையே இந்த கூட்டு முயற்சியின் அஸ்திவாரம் என்பதோடு , மலேசிய கலைஞர்கள் சங்கத் தலைவர் டத்தோ கோபால கிரிஷ்ணன் வழங்கியிருக்கும் நல்லாதரவும் நல்லாசியுமே எங்களுக்கு உத்வேகத்தை வழங்கிற்று என புகழாரம் சூட்டினார்.

விழாவிற்கு தலைமை தாங்கிய டத்தோ கோபாலகிருஷ்ணன், இந்த கூட்டு உடன்படிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றும், அது முழுமையாக அமலாக்கம் காண தாம் முழுமையாக கண்கானிக்கவிருப்கதாக கூறியதோடு, இரு தரப்பினருக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.

இவ்விழாவில் மலேசியக் கவிஞர் சீராகியின்”ஜாலியானந்தா” சிந்தனை புரட்சி நூல் விமரிசையாக அறிமுகம் கண்டது.
செவிக்கினிய கீதங்கள், அறுசுவை உணவு , பாராட்டு வைபவம் என “செனனையில் பொன்னந்தி மாலைப் பொழுது” வெற்றிகரமான அமைந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles