

மலாக்கா, அக் 6-
இப்போது மலாக்கா மாநில அரசின் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் (EXCO) சகோதரர் சண்முகமும் இணைந்து, கரும காரியம் செய்வதற்கான ஒரு இடத்திற்கு பூமி பூஜை நடத்த உள்ளனர்.
- இந்த இடம் நீண்டகால பயன்பாட்டிற்கான இடமா அல்லது நிலமா? அது அதிகாரப்பூர்வமாக அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அல்லது குறுகியகால பயன்பாட்டிற்கான Temporary Occupation Licence (TOL) நிலமா?
- இந்த இடத்திற்குச் செல்லும் சாலை மற்றும் கரும காரியம் நடைபெறவுள்ள இடம் பாதுகாப்பாகவும், முறையாகப் பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளதா?
- கடந்த 5 ஆண்டுகளாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல், மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்ட பின்னரும், PRN Melaka நெருங்கியுள்ள இந்த நேரத்தில்தான் ஏன் இவ்வாறான ஒரு அரசியல் நாடகத்தை நடத்த வேண்டும்?
மலாக்கா இந்திய சமூகத்தினர் முட்டாள்கள் அல்ல.
அவர்களுக்கு உண்மை நிலைமை என்ன என்பது நன்றாகத் தெரியும். வெறும் வாக்குறுதிகளையும், தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் அரசியல் நாடகங்களையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பிரசாந்த் குமார் பிரகாசம்
பார்ட்டி பெர்சாமா மலேசியா வேட்பாளர்
N08 மாசாப் ஜெயா சட்டமன்றத் தொகுதி மலாக்கா.
மலாக்கா முதலமைச்சரின் முன்னாள் சிறப்பு செயலாளர்.

