செலாயாங் தொகுதியில் வசதி குறைந்த மக்களுக்கு வவாசான் கட்சி உதவிக் கரம்!

செயலாங், அக் 7-
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் ஒரு முக்கிய கட்சியாக இடம் பெற்றுள்ள வவாசான் நெகரா கட்சி தற்போது நாடு முழுவதும் கிளைகளை அமைத்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.

அந்த வகையில் செலாயாங் நாடாளுமன்ற தொகுதியில் வவாசான் நெகரா கட்சி மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு கண்டு வருகிறது.

செலாயாங் வவாசான் நெகரா கட்சியின் டெம்பளர் சட்டமன்ற தொகுதி இந்திய பிரிவு தலைவராக பொறுப்பேற்றுள்ள சரவணன் தலைமையில் நேற்று வசதி குறைந்த 20 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டது.

செலாயாங் வவாசான் நெகரா தொகுதி உதவித் தலைவர் கே வசந்தகுமார், தெலுக் இந்தான் டத்தோ முரளி, செலாயாங் வவாசான் நெகரா தொகுதி துணை தலைவர் சோபியான் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles