Sara STR உதவித் தொகை ஒரு பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பு! பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர் அக் 9-
சாரா எஸ்டிஆர் உதவிக்கான ஒதுக்கீடு 1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

STR பெறுபவர்களுக்கான அடிப்படை ரஹ்மா பங்களிப்பு (சாரா), மாதத்திற்கு அதிகபட்சமாக 150 ரிங்கிட் அல்லது ஆண்டுக்கு 1,800 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.

இந்த ஆண்டுத் தொகையானது, பட்ஜெட் 2026-இன் கீழ் STR பெறுபவர்களுக்கு வழங்கப்படும் 900 ரிங்கிடை விட இருமடங்கு ஆகும்.

கூடுதலாக, சாராவை இப்போது புதிய பொருட்களை வாங்குவதற்கும் பயன்படுத்தலாம் என்று பிரதமர் கூறினார்.

அடிப்படை சம்பளம் 2,000 ரிங்கிட்
நாட்டில் குறைந்தபட்ச ஊதிய விகிதம் ஜூன் 2027 முதல் 1,700 ரிங்கிட்டில் இருந்து 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.

50 மில்லியன் ரிங்கிட்டுக்கும் குறைவான விற்பனை வருவாய் கொண்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விகிதத்தால் நாற்பது லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று இன்று நாடாளுமன்றத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles