
கோலாலம்பூர் அக் 9-
நாட்டில் குறைந்தபட்ச ஊதிய விகிதம் ஜூன் 2027 முதல் 1,700 ரிங்கிட்டில் இருந்து 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அறிவித்தார்.
50 மில்லியன் ரிங்கிட்டுக்கும் குறைவான விற்பனை வருவாய் கொண்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விகிதத்தால் நாற்பது லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று அன்வர் கூறினார்.
மேலும், பகுதித் திறன் கொண்ட தொழிலாளர்கள், பட்டதாரிகளுக்கான தொடக்க ஊதியமாக மாதத்திற்கு 2,500 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

