15,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த மருத்துவர்களுக்கு நிரந்தரப் பணி

மலேசியாவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 15,000க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு நிரந்தரப் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இதன் மூலம் நாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த ஒப்பந்த மருத்துவர்கள் தொடர்பான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரை 4,000 மருத்துவர்களுக்கு நிரந்தரப் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 9,000க்கும் அதிகமான மருத்துவர்களுக்கு அடுத்த ஆண்டு வழங்கப்படும்.

இதனிடையே, 47,000 துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தாதியர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில், போஸ் பாசிக் (Pos Basik) சிறப்புப் பயிற்சிக்கான ஊக்கத்தொகை மாதம் 100 ரிங்கிட்டிலிருந்து 200 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.

வான்வழி சுகாதாரச் சேவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சேவை ஊக்கத்தொகையும் 30 ரிங்கிட்டிலிருந்து 100 ரிங்கிட்டாக உயர்த்தப்படுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பிரதமர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles