நாசி லெமாக் வியாபாரிக்கு கைகொடுத்த சிலாங்கூர் அரசின் ‘I-SEED’ திட்டம்

காஜாங், அக் 8 : உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக உணவு விநியோக (கேட்டரிங்) ஆர்டர்களை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த நாசி லெமாக் வியாபாரி வி. சுமத்ரா , ஐ-சீட் சிலாங்கூர் இந்திய தொழில்முனைவோர் வளர்ச்சித் திட்டத்தின் (I-SEED) மூலம் உதவியைப் பெற்று, தனது தொழிலை மீண்டும் விரிவுபடுத்தும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.

“ முன்னதாக உபகரணங்கள் இல்லாததால் அதிக அளவில் ஆர்டர்களைப் பெற முடியவில்லை.

தற்போது வழங்கப்பட்டிருக்கும் மின்சார குக்கர் மற்றும் மிளகாய் அரைக்கும் இயந்திரம் ஆகியவற்றைக் கொண்டு எனது கேட்டரிங் சேவையை மீண்டும் தொடங்கவிருக்கிறேன்” என கடந்த ஈராண்டுகளாக காஜாங்கில் நாசி லெமாக் தொழில் செய்து வரும் சுமத்ரா தெரிவித்தார்.

சுமத்ரா, காஜாங், தாமான் கியூபெக்சில் உள்ள தனது இல்லத்தில் ஐ- சீட் உதவியைப் பெற்றுக் கொண்டார்

இந்த புதிய உபகரணங்கள் தனது சமையல் வேலைகளை எளிதாக்குவதோடு, வியாபார வருமானத்தையும் அதிகரிக்கும் என சுமத்ரா மீடியா சிலாங்கூரிடம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த உதவிக்கு தன்னால் எளிதாக விண்ணப்பிக்க முடிந்ததாக கூறிய அவர், வேண்டிய அடிப்படை ஆவணங்கள் இருந்தாலே போதுமானது என்றார்.

மேலும், இந்திய சமூகத் தலைவரின் வழிகாட்டுதலுடன் I-SEED விண்ணப்ப முறையும் எளிதானதாக அவர் குறிப்பிட்டார்.

“அதிகமான சிறு வியாபாரிகள், குறிப்பாக இந்திய சமூகத்தினர், தொழிலை மேம்படுத்த I-SEED போன்ற திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொழிலை மேலும் முன்னேற்ற கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் உதவியையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன்” என சுமத்ரா கூறினார்.

முன்னதாக, காஜாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் கியான் யாங் சுமத்ராவிற்கு ஐ -சீட் உதவியை வழங்கினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles