சிலாங்கூர் மாநில அரசு சார்பில்576 இந்திய மாணவர்களுக்கு 15 லட்சத்து 46, 515 வெள்ளி கல்வி நிதியுதவி!

ஷா ஆலம் அக் 10-
சிலாங்கூர் மாநில அரசு சார்பில் இன்று 576 இந்திய மாணவர்களுக்கு 15 லட்சத்து 46 ஆயிரத்து 515 வெள்ளி கல்வி நிதியுதவியாக வழங்கப்பட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக மாண்புமிகு கணபதி ராவ் இருந்தபோது சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வசதி குறைந்த இந்தியர் உயர்கல்வி மாணவர்களுக்கு உதவ கல்வி நிதி திட்டத்தை உருவாக்கினார்.

2013 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை வசதி குறைந்த இந்தியர் மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு கல்வி நிதியை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் 576 மாணவர்களுக்கு 15 லட்சத்து 46 ஆயிரத்து 515 வெள்ளி வழங்கப்பட்டது.

டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு தலா 2,000 வெள்ளியும் டிகிரி பயிலும் மாணவர்களுக்கு தலா 3,000 வெள்ளியும் வழங்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் திரளாக கலந்து சிறப்பித்தனர்

சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் அரசு இந்திய சமுதாயத்திற்கு எப்போதும் அதிக உதவிகளையும் மானியமும் வழங்கி வருகிறது என்று பாப்பா ராயுடு தெரிவித்தார்

ஆண்டுதோறும் தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 லட்சம் வெள்ளி மானியம், கோவில்களுக்கு 18 லட்சம் வெள்ளி மானியம், தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு 15 லட்சம் வெள்ளிக்கு மேல் இலவச பேருந்து கட்டணம், ஐ சிட் மூலம் இந்திய சிறு தொழில் வியாபாரிகளுக்கு வர்த்தக உபகரணங்களை சிலாங்கூர் மாநில அரசு வழங்கி வருகிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles