7 கோடியே 50 லட்சம் வெள்ளி கல்வி உபகார சம்பளம் வழங்கி
1,000 ஏழை மாணவர்களுக்கு உதவும்
பைனாரி பல்கலைக்கழகத்தின் பணி அளப்பரியது!
மனித வள அமைச்சர் வ.சிவகுமார் பாராட்டு

நாட்டில் உள்ள வசதி குறைந்த 1,000 ஏழை மாணவர்களுக்கு முழு கல்வி உபகார சம்பளம் வழங்க முன்வந்துள்ள பைனரி பல்கலைக்கழகத்தின் சேவையை மனித வள அமைச்சர் வ சிவகுமார் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதன் மூலம் அனைத்து இனங்களையும் சேர்ந்த 1,000 குடும்பங்களின் கண்ணீரை பைனாரி பல்கலைக்கழகம் துடைத்துள்ளது என்றார் அவர்.

கடந்த காலங்களில் உயர் கல்வி பயில்வதற்கு பணம் ஒரு தடையாக இருந்தை யாரும் மறுக்க முடியாது.

பல்கலைக் கழகங்களில் உபகார சம்பளம் பெறுவது மாணவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

ஆனால் இன்று 1,000 மாணவர்களுக்கு முழு உபகார சம்பளம் வழங்க பைனரி பல்கலைக்கழக நிர்வாகமும் அதன் தோற்றுநருமான டான்ஸ்ரீ ஜோசப் அடைக்கலம் முன்வந்து உள்ளது பெரிதும் பாராட்டுக்குரியது.

ஒரு மாணவருக்கு 75 ஆயிரம் முதல் 77 ஆயிரம் வெள்ளி உபகாரச் சம்பளமாக வழங்க பைனாரி பல்கலைக்கழகம் முன் வந்துள்ளது.

இதன் மதிப்பு 75 மில்லியன் அதாவது 7 கோடியே 50 லட்சம் வெள்ளியாகும்.

19 அரசு இயக்கங்களின் வாயிலாக மாணவர்களை அடையாளம் காணும் முயற்சியிலும் பைனாரி பல்கலைக்கழகம் களம் இறங்கி உள்ளது.

இவ்வேளையில் டான்ஸ்ரீ ஜோசப் அடைக்கலத்திற்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நேற்று பைனாரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை எற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது பிரதமரின் மடானி மலேசியாவின் முக்கிய கொள்கையாகும்.
அரசாங்கத்தின் இந்த கொள்கைக்கு ஏற்ப பைனரி பல்கலைக்கழகம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதுபோன்ற திட்டங்கள் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles