மனித வள அமைச்சர்
வ. சிவகுமாரின்
உகாதி தெலுங்கு வருடப் பிறப்பு வாழ்த்துச் செய்தி

மலேசிய இந்திய தெலுங்கு வம்சாவளியினர் உகாதி தெலுங்குப் புத்தாண்டுத் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்வதாக மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

பல்லின மக்கள் வாழும் மலேசிய திருநாட்டில் அனைவரும் தங்களது புத்தாண்டை பாரம்பரியம் மறவாமல் கொண்டாடி வருவதும் பாராட்டுக்குரியது.

அந்த வகையில் காலங்காலமாக இந்நாட்டில் மற்ற இனத்தவர்களை அரவணைத்து வாழ்ந்து வரும் தெலுங்கு சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் தங்களது பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கும் அவர்கள் அனுப்பி வருகிறார்கள்.

இன, மத பேதமின்றி மலேசிய இந்தியர்கள் அனைவருக்கும் இந்நாட்டில் ஒற்றுமையுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன் என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் தமது புத்தாண்டு வாழத்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles