


ஜொகூர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மனித வள அமைச்சர் சிவகுமார் மூலம் கடந்த வாரத்தில் ஒரு லோரி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று இரண்டாவது முறையாக மனித வள அமைச்சர் சிவகுமார் மூலம் ஜோகூர் லாபிஸ் வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டன.
மனித வள அமைச்சர் சிவகுமாரின் அரசியல் செயலாளர் ரவீந்திரன், சொக்சோ நிறுவனத்தின் இயக்குநர் டி கண்ணன் ஆகியோர் தலைமையில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜொகூர் லாபிஸ் வட்டார அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு உதவி புரிந்தனர்.
தக்க நேரத்தில் தங்களுக்கு உதவிகள் வழங்கிய மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு பாதிக்கப்பட்ட மக்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

