இன பேதமின்றி மலேசியர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்!
உகாதி புத்தாண்டு விழாவில்
மனித வள அமைச்சர் வ.சிவகுமார் வேண்டுகோள்

மலேசிய தெலுங்கு சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் உகாதி புத்தாண்டு கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மனித வள அமைச்சர் வ சிவகுமார் மற்றும் மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் வெங்கெட் பிரதாப் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

சிறப்பு பூசைகளுக்கு பின்னர்
உகாதி புத்தாண்டு விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் கிருஸ்ணராவ் மற்றும் பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய அறங்காவலர் டத்தோஸ்ரீ டாக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு மாலைகள் அணிவித்து சிறப்பித்தனர்.

பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் மலேசிய தெலுங்கு சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட முன்னாள் தலைவர்கள் லெட்சு, வெங்கடேஷ் சிறப்பிக்கப்பட்டனர்.

இன, மத பேதமின்றி மலேசிய இந்தியர்கள் அனைவருக்கும் இந்நாட்டில் ஒற்றுமையுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது உரையில் குறிப்பிட்டார்.

பல்லின மக்கள் வாழும் மலேசிய திருநாட்டில் அனைவரும் தங்களது புத்தாண்டை பாரம்பரியம் மறவாமல் கொண்டாடி வருவதும் பாராட்டுக்குரியது.

அந்த வகையில் காலங்காலமாக இந்நாட்டில் மற்ற இனத்தவர்களை அரவணைத்து வாழ்ந்து வரும் தெலுங்கு சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

மலேசியர்கள் மத்தியில் சகிப்புத்தன்மை மற்றும் ஒருவருக்கு ஒருவர் உதவிடும் மனப் பக்குவம் அதிகரிக்க வேண்டும் என்று மனித வள அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

இந்த விழாவில் மனித வள அமைச்சரின் தனிச் செயலாளர் மகேஸ்வரி, மற்றோரு செயலாளர் சுகுமாரன், பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய நிர்வாகத்தினர், மலேசிய சமூக நல ஹராப்பான் இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சுகுமாரன் – டத்தின் ஷீலா தம்பதியர் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles