இந்தியர் விவகார குழு அமைப்பது தொடர்பில்! மனித வள அமைச்சர் வ. சிவகுமார் பரிந்துரையை முன் வைத்தார்

இந்நாட்டில் இந்தியர்களின் நலன்களை பாதுகாப்பது மற்றும் அவர்கள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியர் விவகார குழு அமைக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் பரிந்துரை செய்திருப்பதாக பிரதமர் துறை அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம் சரவணன், இந்தியர்களின் விவகாரங்களை கவனிக்க சிறப்பு குழு அமைக்கப்படுமா கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் துறை அமைச்சர் Datuk Armizan Mohd Ali , மனித வள அமைச்சர் வ. சிவகுமார் இது தொடர்பில் பரிந்துரை ஒன்றை முன் வைத்துள்ளார்.

இருப்பினும் இந்த பரிந்துரை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles