சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை கைவிட முடியாது! டாக்டர் இராமசாமி அறிவிப்பு

சுங்கை பாக்காப் தமிழ்பள்ளியின் கட்டுமான பணியை கைவிடுவதில் பினாங்கு அரசுக்கு உடன்பாடு இல்லை என்று மாநில துணை முதல்வர் டாக்டர் இராமசாமி கூறினார்.

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி அமைந்துள்ள நிலம் தனியார் நிலத்தில் உள்ளது.
புதிய பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் 3.5 மில்லியன் வெள்ளி செலவில் கட்டுமானப் பணிகள் நடந்து முடிந்து உள்ளது.

இந்த பள்ளியின் கட்டுமான செலவு 15 மில்லியன் வெள்ளி என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் தான் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பள்ளி கட்டுமானத்தை முடிக்க போதுமான நிதி இல்லை. இதனால் அப் பள்ளி கட்டுமானத்தை தொடர முடியாது.

அதே வேளையில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாறிச் செல்லலாம் என்று மாநில கல்வி இலாகா கடிதம் வெளியிட்டு உள்ளது.

மேலும், பள்ளி கட்டுவதற்கு அரசின் நிதி இல்லை என்றால் நிதி திரட்டி கட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
அதற்குள் கல்வி இலாகா இந்தக் கடிதத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது.

சொந்த நிலத்தில் பள்ளியை கட்டுவதற்கு அடித்தளமும் அமைக்கப்பட்டு உள்ளது. ஆகவே, பள்ளி கட்டுமானத்தை அவ்வளவு எளிதாக நிறுத்தி விட முடியாது என்று இராமசாமி கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles