
நிதி நெருக்கடியை எதிர் நோக்கி இருக்கும்
சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் கல்வி அமைச்சு சிறந்த முறையில் தீர்வு காண வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி அமைந்துள்ள நிலம் தனியார் நிலத்தில் இருப்பதாகவும்
புதிய பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் 3.5 மில்லியன் வெள்ளி செலவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது
ஆனால் பள்ளி கட்டுமானத்தை முடிக்க போதுமான நிதி இல்லை. கட்டுமானத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால்
பள்ளியில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாறிச் செல்லலாம் என்று மாநில கல்வி இலாகா கடிதம் வெளியிட்டு உள்ளது.
இது பற்றி கருத்துரைத்த மனித வள அமைச்சர் சிவகுமார், இந்த விவகாரத்தை கல்வி அமைச்சு மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.
மேலும் இந்த தமிழ்ப் பள்ளி பினாங்கு நிபோங் திபாலில் அமைந்துள்ளது. இதன் நாடாளுமன்ற உறுப்பினராக கல்வி அமைச்சர் பாட்லினா இருக்கிறார்.
ஆகவே கல்வி அமைச்சு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது நல்லது என்று அவர் சொன்னார்.

